\
வழக்கறிஞர் மீது தாக்குதல்: காவல்துறையை கண்டித்து போராட்டம்

வழக்கறிஞர் மீது தாக்குதல்: காவல்துறையை கண்டித்து போராட்டம்

வழக்கறிஞர் மீது தாக்குதல்: காவல்துறையை கண்டித்து போராட்டம்
Published on

நெல்லையில் வழக்கறிஞர் ஒருவரை காவல்துறையினர் தாக்கியதாக எழுந்த புகாரில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நெல்லை மாவட்டம், மாறன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் செம்மணி. இவரை கடந்த 3ம் தேதி விசாரணைக்காக அழைத்துச் சென்று காவல் துறையினர் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் குற்றசாட்டு எழுந்தது. இதனையடுத்து செம்மணியை அழைத்து சென்ற ராதாபுரம் உதவி ஆய்வாளர் பழனி உட்பட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் செம்மணியை தாக்கிய காவல் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் சக  வழக்கறிஞர்கள் இன்று நெல்லை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com