\
கோவையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மீது தாக்குதல் - போலீஸ் குவிப்பு

கோவையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மீது தாக்குதல் - போலீஸ் குவிப்பு

கோவையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மீது தாக்குதல் - போலீஸ் குவிப்பு
Published on

கோவையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர், அடையாளம் தெரியாத ந‌பர்களால் தாக்கப்‌பட்டதன் எதிரொலியாக நகரம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.‌

கோவை மாவட்டம் காந்திபுரம் பிரதான சாலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் கடந்த 4 நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் இந்து முன்னணி மா‌வட்ட செயலாளர் ஆனந்த் என்பவர் பங்கேற்று வந்தார். இந்நிலையில், இவர் நேற்று இரவு நஞ்சுண்டாபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்த மர்ம நபர்கள் அவரை சரிமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து அப்பகுதி வழியே வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த இந்து அமைப்பின் பிரமுகர்கள் மருத்துவமனையின் முன்பு திரண்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாராணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கோவை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com