\
டி.எஸ்.பி மீது தாக்குதல்: சண்டையில் கிழிந்தது சட்டை

டி.எஸ்.பி மீது தாக்குதல்: சண்டையில் கிழிந்தது சட்டை

டி.எஸ்.பி மீது தாக்குதல்: சண்டையில் கிழிந்தது சட்டை
Published on

தூத்துக்குடி அந்தோணியார்புரத்தில் சாலையோரத்தில் மது அருந்திக்கொண்டிருந்தவர்களை பிடித்த டி.எஸ்.பியை அந்த பகுதி மக்கள் தாக்கினர். 

சாலையோரத்தில் அமர்ந்து மது அருந்தி பொதுமக்களுக்கு சிலர் இடையூறு ஏற்படுத்துவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, டிஎஸ்பி சீமைச்சாமி சிலரை பிடித்து காவல் வாகனத்தில் இயற்ற முற்பட்டுள்ளார். அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலரும், ஆண்களும் காவல் வாகனத்தை மறித்தனர். அதனை தொடர்ந்து டிஎஸ்பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள், அவரையும் அவருடன் இருந்த காவலர்களையும் தாக்கினர். இதில் அவர்கள் சட்டைகள் கிழிந்தன. இது தொடர்பாக அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com