\
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி - இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி - இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி - இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!
Published on

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 2 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com