ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களை குறிவைத்து நூதன மோசடி - சிசிடிவி 

ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களை குறிவைத்து நூதன மோசடி - சிசிடிவி 

ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களை குறிவைத்து நூதன மோசடி - சிசிடிவி 
Published on

அரியலூரில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களுக்கு உதவுவது போல நடித்து, ஒருவர் நூதன முறையில் பணம் கொள்ளையடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

செந்துறை சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில், பணம் எடுப்பதற்காக 2 பெண்கள் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர், அவர்களுக்கு உதவுவதுபோல நடித்து, ஏடிஎம் கார்டை வாங்கி நொடிப்பொழுதில் அதை மாற்றி, மற்றொரு கையில் வைத்திருந்த போலி ஏடிஎம் கார்டை எடுத்து இயந்திரத்தில் போட்டு பணம் எடுக்க முயற்சிக்கிறார். 

ரகசிய எண்ணை கேட்டுத் தெரிந்து கொண்ட அந்த நபர், தங்களது வங்கிக் கணக்கில் பணம் இல்லை எனக் கூறியுள்ளார். அவர்களை நம்ப வைப்பதற்காக மீண்டும் மீண்டும் பணம் எடுக்க முயற்சிப்பதுபோல் நடித்து, கடைசியாக அந்த போலி ஏடிஎம் கார்டையே கொடுத்து அனுப்பி விடுகிறார். பெண்கள் இருவரும் சென்ற உடன், அசல் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி வங்கிக் கணக்கில் இருந்த 20 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இந்தக் காட்சிகள் ஏடிஎம் மையத்திலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.

ஏடிஎம் மையங்களில் காவலாளிகள் நியமிக்காததே, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் காரணம் என வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் கொள்ளையனைத் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com