\
ஏடிஎம் இயந்திரத்தை துளையிட்டு ரூ.4 லட்சம் கொள்ளை

ஏடிஎம் இயந்திரத்தை துளையிட்டு ரூ.4 லட்சம் கொள்ளை

ஏடிஎம் இயந்திரத்தை துளையிட்டு ரூ.4 லட்சம் கொள்ளை
Published on

சென்னையை அடுத்த பண்டிகாவனூர் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை துளையிட்டு 4 லட்சம் ரூபாய்‌ கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

ஏடிஎம்-மில் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்கள் இயந்திரம் சேதமடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்‌, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். 

அதில், முகமூடி அணிந்து வந்த இரண்டு நபர்கள், ஏடிஎம் இயந்திரத்தில் துளையிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர். இதே நபர்கள், திருநின்றவூரில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com