சாலை மறியல் செய்த பெண்கள்
சாலை மறியல் செய்த பெண்கள்புதியதலைமுறை

ஆத்தூர்|பிரசவித்த சில நாட்களில் பெண் மரணம்; தவறான சிகிச்சையே காரணம் எனக் கூறி உறவினர்கள் சாலைமறியல்!

ஆத்தூர் அருகே தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியல்
Published on

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியல்..

பனைமடல் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மனைவி செல்லம் (37). இவருக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த 14ஆம் தேதி குழந்தை பிறந்த நிலையில், அவருக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ததாக கூறப்படுகிறது.

இதில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்லம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தவறான சிகிச்சையால் செல்லும் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் கருமந்துறை - ஏத்தாப்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com