அத்தி வரதர் தரிசனத்திற்காக குவிந்த பக்தர்கள் வாகனம் : நெருக்கடியான காஞ்சிபுரம்

அத்தி வரதர் தரிசனத்திற்காக குவிந்த பக்தர்கள் வாகனம் : நெருக்கடியான காஞ்சிபுரம்

அத்தி வரதர் தரிசனத்திற்காக குவிந்த பக்தர்கள் வாகனம் : நெருக்கடியான காஞ்சிபுரம்
Published on

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் 40 ஆயிரத்துக்கும் அதி‌கமான வாகனங்கள் காஞ்சிபுரத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. 

நாளை வரை மட்டுமே அத்திவரதர் ச‌யன கோலத்தில் காட்சியளிப்பார் என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்‌ காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து ஆன்மீக சுற்றுலா வரும் பக்தர்கள், குடும்பத்தோடு வரும் பக்தர்கள், தங்கள் வாகனங்களை நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிறுத்தி வைக்கின்‌றனர். 

அதனால், வாலாஜாபாத் - தாம்பரம் சாலை, காஞ்சிபுரம் பேருந்துநிலையம் செல்லும் சாலை, உத்திரமேரூர், வந்தவாசி சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் சென்ற 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை வெளியே சென்ற பிறகே புதிதாக வரும் வாகனங்களை அனுமதிக்க முடியும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதனால், காஞ்சிபுரம் எல்லைகளான சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பொன்னேரி, வாலாஜாபாத், செவிலிமேடு, ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் குவிந்துள்ளன. அங்கிருந்து மினி பேருந்துகள் மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com