திருச்சி பெரிய கடைவீதி பகுதியிலுள்ள ஸ்ரீ கமலாம்பிகை உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் சோம வாரம் தினத்தன்று, ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் ருத்ரா அபிஷேகம் செய்யப்படும் நிலையில், தெய்வங்களின் பல்வேறு அவதாரங்கள் வைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு அத்திவரதர் வைபோகம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், காஞ்சி சென்று அத்திவரதரை தரிசிக்க இயலாதவர்கள் இங்கு தரிசனம் செய்வார்கள் என்ற நோக்கத்தில் அத்திவரதர் அவதாரம் வைக்கப்பட்டுள்ளது.
இதனால் இங்கு வைக்கப்பட்டுள்ள அத்திவரதரை திருச்சி மக்கள் ஆர்வத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர். இன்றிலிருந்து சனிக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு மக்கள் அத்திவரதர் அவதாரத்தில் உள்ள பெருமாளை தரிசிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.