அத்திவரதர் ஆதரவினால் முதல் இடத்திற்கு முன்னேறிய காஞ்சிபுரம்

அத்திவரதர் ஆதரவினால் முதல் இடத்திற்கு முன்னேறிய காஞ்சிபுரம்
அத்திவரதர் ஆதரவினால் முதல் இடத்திற்கு முன்னேறிய காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் உள்நாட்டு சுற்றுலா தலங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது சில புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.


சென்னைக்கு அருகே உள்ள மாவட்டம் காஞ்சிபுரம். இந்த ஊரில்தான் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு கடந்த ஜூலை மாதம் அத்திவரதர் வைபவம் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. குளத்தின் அடியில் மூழ்கி இருந்த அத்திவரதர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தினமும் ஒரு ஆடை அலங்காரத்துடன் அவர் காட்சியளித்தார். ஆகவே அவரைக் காண கோடிக்கணக்கில் மக்கள் அங்கு குவிந்தனர். இரவு பகல் என்று பாராமல் மக்கள் தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய இந்தத் திருவிழா ஆகஸ்ட் மாதம் வரை நீண்டது. தமிழகத்தை தாண்டி பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் காஞ்சிபுரத்தில் வந்து குவிந்தனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் சுற்றுலா துறையின் மூலம் கிடைத்துள்ள தகவலின் படி இந்த ஆண்டில் இந்தக் குறிப்பிட்ட நாட்களுக்குள் மொத்தம் 3 கோடியே 82 லட்சம் பேர் அத்திவரதரைக் கண்டுகளித்துள்ளனர். அதேபோல இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மட்டுமே இந்த ஊருக்கு 5.82 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதுவே 2018 ஆண்டில் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை மட்டுமே 71.4 லட்சம் பேர் வந்துள்ளனர். கடந்த ஆண்டு முழுவதுமான கணக்கின்படி 4 கோடியே19 லட்சம் பயணிகள் இந்தக் கோயில் தளத்திற்கு வந்துள்ளனர்.

இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேசியுள்ள தமிழ்நாடு சுற்றுலா அதிகாரி ஒருவர் “இவ்வளவு சுற்றுலா பயணிகள் காஞ்சிபுரத்திற்கு வருவதற்கு அத்திவரதர் ஒரு முக்கியமான காரணம்” என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com