வாஜ்பாய் மறைவுக்கு சச்சின், ரஜினி இரங்கல்

வாஜ்பாய் மறைவுக்கு சச்சின், ரஜினி இரங்கல்
வாஜ்பாய் மறைவுக்கு சச்சின், ரஜினி இரங்கல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு கிரிக்கெட் பிரபலம் சச்சின் டெண்டுல்கர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 40 நாட்களுக்கு மேலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதென எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் வாஜ்பாய் உயிர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று இந்திய நேரப்படி, மாலை 5.05க்கு பிரிந்தது. இதனையொட்டி பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள ரஜினிகாந்த், “நாட்டின் தலைசிறந்த தலைவர் மறைந்தது மிகவும் வேதனையளிக்கிறது” என தெரிவித்துள்ளார். இதேபோன்று சச்சின், “இந்தியாவிற்கு பெரிய இழப்பு இன்று. அடல் பிகாரி வாஜ்பாய்ஜி மறைந்துவிட்டார். அவர் நமது தேசத்திற்கு எண்ணற்றவை செய்துள்ளார். அவரது பிரியர்களுக்காக பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com