மதுரை: ஆயுதப்படை காவலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரை: ஆயுதப்படை காவலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரை: ஆயுதப்படை காவலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
Published on

மதுரையில் ஆயுதப்படை காவலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றும் ஷாஜகான் என்பவரது வீடு மதுரையிலுள்ள மேலமடைப் பகுதியில் உள்ளது. கடந்த 23-ஆம் தேதி ஷாஜகான் அவரது வீட்டின் முன்பு நின்ற போது அதே பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் சிலர் மதுபோதையில் சென்றதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதனைத் தட்டிக்கேட்ட ஷாஜகானுக்கும் ரவுடிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் இரண்டு பேரை அண்ணாநகர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  ஷாஜகானுடனான வஞ்சகத்தை மனதில் வைத்திருந்த ரவுடிகளின் நண்பர்கள் நேற்று ஷாஜகான்  வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அண்ணாநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com