21 வயதில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொறியியல் பட்டதாரி பெண்

21 வயதில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொறியியல் பட்டதாரி பெண்
21 வயதில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொறியியல் பட்டதாரி பெண்

தென்காசி மாவட்டத்தில் 21 வயது பொறியியல் பட்டதாரியான இளம் பெண் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட லெட்சுமியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி சுப்பிரமணியன். தொழிலதிபரான இவரது மனைவி சாந்தி, பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சாரு கலா (21) என்ற மகளும், சந்துரு என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் பொறியியல் பட்டதாரியான சாருகலா, வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு 796 வாக்குகள் வித்தியாசத்தில வெற்றி பெற்றுள்ளார். தேசத்தந்தை மகாத்மா காந்தி, கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு என கூறியது மனதில் பதிந்த நிலையில், கிராம வளர்ச்சிக்கு பாடுபட்டு மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்ற எண்ணத்தில் போட்டியிடுவதாக சாருகலா ஏற்கெனவே கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 3336 வாக்குகள் பெற்று 796 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இளம் வயதில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com