சத்தியமங்கலத்தில்: போலி மருத்துவரா...? பொதுமக்கள் புகார் - போலீசார் விசாரணை

சத்தியமங்கலத்தில்: போலி மருத்துவரா...? பொதுமக்கள் புகார் - போலீசார் விசாரணை

சத்தியமங்கலத்தில்: போலி மருத்துவரா...? பொதுமக்கள் புகார் - போலீசார் விசாரணை
Published on

சத்தியமங்கலம் அருகே கிளினிக் நடத்தியவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் மருத்துவமனை நடத்திய இருவரை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்ப நாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியூரைச் சேர்ந்த இருவர் டாக்டர் எனக் கூறி அப்பகுதியில் மருத்துவனை தொடங்கி நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் டாக்டர் மற்றும் உதவியாளர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் சத்தியமங்கலம் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற சத்தியமங்கலம் போலீசார், மருத்துவமனையில் டாக்டராக இருந்த கடலூரைச் சேர்ந்த ஏழுமலை, உதவியாளராக இருந்த கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு ஆகிய இருவரையும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ஏழுமலை சீனாவில் எம்பிபிஎஸ் படித்ததாகவும் கொரோனா காரணமாக மீண்டும் படிக்க முடியாமல் கே.என்.பாளையத்தில் டாக்டரிடம் உதவியாளராக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் ஈரோடு மருத்துவத் துறை இணை இயக்குனருக்கு தகவல் தெரிவித்து இது சம்பந்தமாக மருத்துவர் மற்றும் உதவியாளர் இருவரையும் அவர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், மருத்துவத் துறை உயர் அதிகாரிகள் இவர்கள் மருத்துவர்களா இல்லையா என்பதை உறுதி செய்வார்கள் என தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com