சேலம்: ஒரு நாள் பள்ளி முதல்வரானார் 6-ம் வகுப்பு மாணவி! எப்படி சாத்தியமானது?

சேலம்: ஒரு நாள் பள்ளி முதல்வரானார் 6-ம் வகுப்பு மாணவி! எப்படி சாத்தியமானது?
சேலம்: ஒரு நாள் பள்ளி முதல்வரானார் 6-ம் வகுப்பு மாணவி! எப்படி சாத்தியமானது?

ஆத்தூர் அருகே தனியார் பள்ளியொன்றில் ஒரு நாள் பள்ளி முதல்வராகியுள்ளார் ஆறாம் வகுப்பு மாணவியொருவர். மாணவர்களின் ஒழுக்கம், கல்வி உள்ளிட்டவைகளை கௌரவிக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதன்படி மாணவியொருவர் இன்று ஒரு நாள் முதல்வராக இருந்திருக்கிறார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஓட்டம்பாறை பகுதியில் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியொன்று செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவ மாணவிகளின் கல்வித்திறன், ஒழுக்கம், மொழித்திறன், முதல் மதிப்பெண் உள்ளிட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு பள்ளியின் ஒரு நாள் முதல்வராக ஒரு மாவணனையோ மாணவியையோ பணியாற்ற வைக்கலாம் என பள்ளியின் முதல்வர் மற்றும் பள்ளி செயலாளர் உள்ளிட்டோர் முடிவு செய்துள்ளனர்.

அதன் அடிப்படையில் பள்ளியில் முதல் மதிப்பெண், ஒழுக்கம், மொழித்திறன் மற்றும் ஆசிரியர்கள் - சக மாணவர்களிடம் பழகும் முறை உள்ளிட்டவைகளின் அடிப்படையாக வைத்து ஆறாம் வகுப்பு மாணவி ஹன்சிகா என்பவரை பள்ளியின் ஒரு நாள் முதல்வராக அவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

அதன் அடிப்படையில் இன்று பள்ளியின் முதல்வர் அறைக்கு ‘முதல்வராக’ சென்ற மாணவி ஹன்சிகாவை, பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைதட்டி வரவேற்றனர். பின்னர் பள்ளியின் முதல்வரும் செயலாளரும் மாணவியிடம் பூங்கொத்து கொடுத்து முதல்வர் இருக்கையில் அமர வைத்தனர்.

தொடர்ந்து அம்மாணவி, ஆசிரியர்களிடம் “வரும் 28ஆம் தேதி பள்ளியில் நடைபெறுகின்ற அறிவியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்ய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தொடர்ந்து வகுப்பறைகளுக்குச் சென்று அறிவியல் கண்காட்சிக்கு மாணவர்கள் தயார் செய்து வைத்திருந்தவற்றை பார்வையிட்டார்.

இது குறித்து மாணவி ஹன்சிகா கூறும் பொழுது, “பள்ளியில் சிறந்து விளங்கியதற்காக எனக்கு ஒரு நாள் முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. அதற்காக பள்ளியின் முதல்வர் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com