பப்ஜி மூலம் மலர்ந்த காதல்: வீட்டை விட்டு வெளியேறிய பெண் காதலனுடன் காவல்நிலையத்தில் தஞ்சம்

பப்ஜி மூலம் மலர்ந்த காதல்: வீட்டை விட்டு வெளியேறிய பெண் காதலனுடன் காவல்நிலையத்தில் தஞ்சம்

பப்ஜி மூலம் மலர்ந்த காதல்: வீட்டை விட்டு வெளியேறிய பெண் காதலனுடன் காவல்நிலையத்தில் தஞ்சம்
Published on

'பப்ஜி' கேம் மூலம் காதலில் விழுந்த ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்ததை அடுத்து, அவர்களுக்கு இருவீட்டாரும் திருமணம் செய்து வைத்தனர்.

ஃபேஸ்புக் காதல், டிக்டாக் காதல் என காலத்திற்கு ஏற்றாற்போல் காதலும் மாற துவங்கியுள்ளது. அதிலும் ஒருபடிமேல் சென்று தற்போது பப்ஜி மூலம் காதல் மலர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே செறுகோல் ஆசாரிபொற்றவிளை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகள் பபிஷா(20). இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவிட்டு கல்வியை இடையிலேயே நிறுத்தி விட்டார். இதையடுத்து நேரம் போக மொபைல் போனில் பப்ஜி விளையாடத் தொடங்கியதாக தெரிகிறது. பின்னர், ஆர்வம் அதிகமாகி நீண்ட நேரம் பப்ஜி விளையாடி வந்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த டேனியல் என்பவரது மகனான அஜின் பிரின்ஸ்(24) என்பவருடன் அடிக்கடி பப்ஜி விளையாடி வந்துள்ளார் பாபிஷா. இவர்களுக்கு இடையேயான விளையாட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 

இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய பபிஷா சாலையின் காரில் காத்திருந்த அஜின் பிரின்ஸுடன் தலைமறைவானார். இதையடுத்து தனது மகளை காணவில்லை என பபிஷாவின் தந்தை சசிகுமார் திருவட்டாறு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் இருவரையும் தேடி வந்த நிலையில், பபிஷா - அஜின் ஜோடி, திருவட்டாறு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதையடுத்து காவல்நிலையம் வந்த அஜின் பிரின்ஸின் பெற்றோர் மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் காதலர்களோ சேர்ந்து வாழ்வதிலேயே குறிக்கோளாக இருந்தனர். இருவரும் மேஜர் என்பதால் காவல்துறையினர் இரு குடும்பத்தினர் முன்னிலையில் திருமணத்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com