\
மதுரை: அலுவலகத்திலேயே உதவி மின் பொறியாளர் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை: அலுவலகத்திலேயே உதவி மின் பொறியாளர் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை: அலுவலகத்திலேயே உதவி மின் பொறியாளர் தூக்கிட்டுத் தற்கொலை
Published on: 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மின் நிலையத்திலேயே உதவி மின் பொறியாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உசிலம்பட்டி பிஎம்டி நகரைச் சேர்ந்த சின்னச்சாமி, சின்னக்கட்டளை துணை மின் நிலையத்தில் கடந்த ஓராண்டாக உதவி மின் பொறியாளராக பணியாற்றி வந்தார். நள்ளிரவு வரை, மின் தடைகளை சரி செய்ய நிகழ்விடங்களுக்கு சென்று அதிகாலையில்தான் பணி முடித்து சின்னசாமி அலுவலகத்திற்கு திரும்பியுள்ளார்.

வீட்டிற்கு செல்லாமல் அலுவலகத்திலேயே இருந்த அவர், தூக்கிட்ட நிலையில் இன்று காலை மீட்கப்பட்டார். 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், சின்னசாமி இந்த விபரீத முடிவு எடுக்க என்ன காரணம் என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com