தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்: சட்டப்பேரவையில் ஆளுநர் உரை!
ஆளுநர் உரையில் எழுவர் விடுதலை குறித்து எதுவும் இடம்பெறவில்லை.
சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இன்று சட்டப்பேரவை கூடியது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை - கலைவாணர் அரங்கில் அவை கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். அவர் ஆற்றிய உரையில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் என தெரிவித்தார்.
மேலும், தமிழ் மொழியை வளர்ப்பது அரசின் கடமை. சேலம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம் விரைவில் செயல்பட தொடங்கும். பெருந்தொற்று காவல்துறையினர் ஆற்றிய பங்கிற்கு பாராட்டுகள். நிவர் மற்றும் புரெவி புயல் பாதிப்புகளுக்காக ரூ.5264 கோடி நிதியை மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும் என குறிப்பிட்டு பேசினார்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. வெளிநடப்புக்கு பின் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ஆளுநர் உரையில் எழுவர் விடுதலை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என தெரிவித்தார்