தமிழகத்திற்கு 6 மாதத்திற்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியால் ஒருபோதும் வளர முடியாது என்றார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னால் பாஜக உள்ளது என குற்றஞ்சாட்டிய அவர், இரட்டை இலை இரண்டாக இல்லை. மூன்றாக பிரிந்துள்ளது என தெரிவித்தார். தமிழகத்திற்கு 6 மாதத்திற்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் கூறினார்.