\
தொகுதிக்குச் செல்லப் போகிறார் கருணாஸ்

தொகுதிக்குச் செல்லப் போகிறார் கருணாஸ்

தொகுதிக்குச் செல்லப் போகிறார் கருணாஸ்
Published on

திருவாடானை தொகுதிக்கு நாளை செல்ல இருப்பதாக அத்தொகுதியின் எம்.எல்.ஏ நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக வலைதளங்களில் தம்மை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாக கூறினார். பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருந்ததாலேயே அவருக்கு ஆதரவளித்தாகவும் விளக்கமளித்தார். மேலும் சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தவர்களே தமக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புவதாகவும் கருணாஸ் குற்றஞ்சாட்டினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com