சென்னை: விமான நிலையத்தில் இறந்த அசாம் பயணி; உடல் சாலை ஓரத்தில் போடப்பட்டதால் அதிர்ச்சி

சென்னை: விமான நிலையத்தில் இறந்த அசாம் பயணி; உடல் சாலை ஓரத்தில் போடப்பட்டதால் அதிர்ச்சி

சென்னை: விமான நிலையத்தில் இறந்த அசாம் பயணி; உடல் சாலை ஓரத்தில் போடப்பட்டதால் அதிர்ச்சி
Published on

சென்னையில் இருந்து அசாம் செல்லவதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த பயணி உடல் வலிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இறந்த உடல் அரை மணி நேரமாக விமான நிலையத்தில் சாலை ஓரத்தில் போடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லவரத்தில் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் தீபக் பால். அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர் தனது சக நண்பர்களுடன் சென்னையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக புலம்பெயர்ந்து தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று சென்னையிலிருந்து கவுகாத்திக்கு மதியம் 3:55க்கு கிளம்பும் விமானத்தில் முன் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் விமானம் கிளம்ப தயாராகும் அரை மணி நேரத்திற்கு முன்பாக காத்திருப்போர் அறையில் இருந்த தீபக் பாலுக்கு உடல் வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்த விமான நிலைய ஊழியர்கள் பயணி தீபக் சஹர் உடலை ஆம்புலன்ஸ் உதவியுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு சிகிச்சை அளித்த பின்னர் தீபக் பால் உடல் தேறிய தாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை அசாமிற்கு விமானம் மூலம் அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாக விமான துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாலை வேளையில் மீண்டும் தீபத் பாலுக்கு விமான நிலையத்தில் உடல் உபாதை ஏற்பட்டுள்ளது . மீண்டும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே தீபக் பால் மரணமடைந்ததால் மீண்டும் விமான நிலையத்திற்கு அவரது பூத உடல் எடுத்து வரப்பட்டது. எடுத்து வரப் பட்ட உடல் சென்னை உள் நாட்டு விமான முனையத்திற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் போடப்பட்டதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக தீபத் பாலின் இறந்த உடல் மழையில் நனைந்து சாலையின் ஓரத்தில் இருந்தது. அவரது உடலை சுற்றி நான்கு பாதுகாப்பு படையினர் காவலில் இருந்த நிலையிலும், உடல் மூடப்பட்டோ, இறந்த உடலுக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை மரியாதை இன்றி அவரது உடல் இருந்தது. பின்னர் விமானத்துறை அதிகாரிகள் மீனம்பாக்கம் காவல் துறையிடம் கொடுத்த தகவலையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பல்லாவரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், தீபக் இறந்தது குறித்து இரண்டு விமான நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com