இரண்டு மடங்கு கட்டணம் கேட்பதா? கோபத்தில் டோல்கேட் ஊழியரை தாக்கிய பெண்

இரண்டு மடங்கு கட்டணம் கேட்பதா? கோபத்தில் டோல்கேட் ஊழியரை தாக்கிய பெண்
இரண்டு மடங்கு கட்டணம் கேட்பதா? கோபத்தில் டோல்கேட் ஊழியரை தாக்கிய பெண்

செங்கல்பட்டு பரணுர் டோல்கேட்டில் அதிக கட்டணம் கேட்டதாக ஊழியரை பெண் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

நேற்று முதல் தமிழகத்தில் உள்ள 24 டோல்கேட்களிலும் நுழைவுக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடிக்கு நேற்று நள்ளிரவு காரில் வந்த பெண், பாஸ்ட்ராக் மூலம் பணம் செலுத்த முயன்றபோது அதில், பேலன்ஸ் குறைவாக இருந்துள்ளது. இதையடுத்து போதிய பணம் இல்லாததால் 110 ரூபாய் கட்டணம் செலுத்தி விட்டு காரை எடுத்துச் சொல்லுங்கள் என ஊழியர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இரண்டு மடங்கு கட்டணம் கேட்பதா என கோபமடைந்த பெண் ஊழியர்களிடம் நீண்டநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், சுங்கச்சாவடி ஊழியரை தாக்கியுள்ளார். மேலும் அவருடன் வந்த ஆண் உறவினர் ஊழியரை தாக்கியதோடு சுங்கச்சாவடி கண்ணாடியை உடைத்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

முன்னதாக செங்கல்பட்டை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் டோல்கேட் ஊழியரை தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், தற்போது மீண்டும் பெண்ணொருவர் ஊழியரை தாக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com