தமிழக காவல்துறை உளவுத்துறைக்கு டிஐஜியாக முதல் பெண் அதிகாரி ஆசியம்மாள் நியமனம் - யார் அவர்?

தமிழக காவல்துறை உளவுத்துறைக்கு டிஐஜியாக முதல் பெண் அதிகாரி ஆசியம்மாள் நியமனம் - யார் அவர்?

தமிழக காவல்துறை உளவுத்துறைக்கு டிஐஜியாக முதல் பெண் அதிகாரி ஆசியம்மாள் நியமனம் - யார் அவர்?

தமிழக காவல்துறை உளவுத்துறைக்கு முதல் பெண் அதிகாரி ஆசியம்மாள். டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். யார் அவர்?

தமிழக காவல்துறையில் முக்கியப் பிரிவாக பார்க்கப்படுவது உளவுத்துறை. அதில் பணியில் அதிக அனுபவமும், திறமையும், நுண்ணறிவும் நிறைந்தவர்களே அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் இதுவரை தமிழக காவல்துறை உளவுத்துறையில் திறமை வாய்ந்தவர்களே நீடித்துள்ளனர். 

கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழக உளவுத்துறையில் நீண்ட காலம் பணிபுரிந்து அனுபவம் வாய்ந்தவர். அதனால் அவருக்கு உளவுத்துறை ஏடிஜிபி பதவியை புதிய திமுக அரசு வழங்கியுள்ளது. அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரியாக டிஐஜி அந்தஸ்த்தில் பெண் அதிகாரியான ஆசியம்மாள் அமர்த்தப்பட்டுள்ளார். இது தமிழக காவல்துறையிலேயே முதன்முறையாகும். 

குரூப்-1 அதிகாரியான ஆசியம்மாள் நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர். 56 வயது நிறைந்த இவர் எம்எஸ்சி, எம்டெக் மற்றும் எம்பிஏ பட்டம் பெற்றவர். தூத்துக்குடி மாவட்டம், கொங்கராயக் குறிச்சி இவர் பிறந்த ஊர். முதல் பணியாக மதுரையில் வரதட்சணைக் கொடுமைத் தடுப்புப்பிரிவில் ஆசியம்மாளுக்கு டிஎஸ்பி பணி வழங்கப்பட்டது. அதனையடுத்து மகாபலிபுரம் டிஎஸ்பி, சென்னை திருவொற்றியூர் சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர், சென்னை போக்குவரத்துப் புலனாய்வுப்பிரிவு உதவி ஆணையராகவும் பணிபுரிந்தார். 

அதன் பிறகு தேனி ஏடிஎஸ்பியாக ஆசியம்மாள் இரண்டே முக்கால் வருடங்களும், தமிழக உளவுத்துறையான எஸ்பிசிஐடியில் இரண்டே முக்கால் ஆண்டுகளும் திறம்பட பணிபுரிந்தார். அதனையடுத்து எஸ்பியாக பதவி உயர்ந்து ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறையில் 3 ஆண்டுகள் திறமையாக பணிபுரிந்து தனி முத்திரை பதித்தார்.

பின்னர் பூக்கடை காவல் மாவட்ட துணை ஆணையர் , அதனையடுத்து சென்னை காவல்துறை தலைமையிட துணை ஆணையராக 2 ஆண்டுகளும், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு, சிபிசிஐடி போன்ற பிரிவுகளிலும் எஸ்பியாக பணிபுரிந்தார். பின்பு கடந்த 2018ம் ஆண்டு டிஐஜியாக பதவி உயர்ந்து போலீஸ் பயிற்சிப் பள்ளி மற்றும் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றினார். அதனையடுத்து அவருக்கு தற்போது உளவுத்துறை டிஐஜியாக பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- சுப்ரமணியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com