\
கந்துவட்டியால் தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார் உடல் தகனம்

கந்துவட்டியால் தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார் உடல் தகனம்

கந்துவட்டியால் தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார் உடல் தகனம்
Published on: 

கந்துவட்டி பிரச்னையால் சென்னையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமாரின் உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அசோக்குமார் கந்துவட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். சசிக்குமாரின் உறவினரான இவர், தற்கொலை செய்து கொல்லுமுன் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அன்புச்செழியனை தேடி வருகின்றனர். 

இதற்கிடையே சென்னையில் உடற்கூற்றாய்வுக்குப் பின், அசோக்குமாரின் உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு, கோமதிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அசோக்குமாரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் மேலமடையில் உள்ள சுடுகாட்டில் அசோக்குமாரின் உடல் எரியூட்டப்பட்டது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com