வரத்து அதிகரிப்பால் மீன் விலை சரிவு - காசிமேட்டில் குவிந்த மக்கள்

வரத்து அதிகரிப்பால் மீன் விலை சரிவு - காசிமேட்டில் குவிந்த மக்கள்
வரத்து அதிகரிப்பால் மீன் விலை சரிவு - காசிமேட்டில் குவிந்த மக்கள்

சென்னை காசிமேட்டில் மீன் வரத்து அதிகரித்து மீன்களின் விலை சரிந்துள்ளதால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை காசிமேட்டில் விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் மீன் விற்பனை களைக்கட்டும். ஆனால், புரட்டாசி மாத தொடக்கமே ஞாயிற்றுக் கிழமையானதால், பெரும்பாலானோர் மீன் வாங்க வராத நிலையில், விலை சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், நாளை தீபாவளி பண்டிகை என்பதால் காசிமேட்டில் மீன்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆழ்கடல் மீன் பிடிப்புக்குச் சென்று கரை திரும்பிய 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்களின் வரத்து அதிகரித்துள்ளதால், மீன்களின் விலை சரிந்துள்ளது.

இதனால் மீன் வாங்க கூட்டம் அலைமோதி வருகிறது. கடந்த வாரம் வஞ்சிரம் ரூ.800 விற்ற நிலையில், இந்த வாரம் ரூ.600-க்கும், சங்கரா 450 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 500 ரூபாய்க்கு விற்ற வவ்வால் 400 ரூபாயக்கும், 300 ரூபாய்க்கு விற்ற கானாங்கத்த மீன் 200 ரூபாய்க்கும், 500 ரூபாய்க்கு விற்ற இறால் 300 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்ற நண்டு 250 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதனால் மீனவர்கள் கவலையடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com