வலுக்கும் ஒற்றைத் தலைமை கோரிக்கை -அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் திடீர் ஆலோசனை

வலுக்கும் ஒற்றைத் தலைமை கோரிக்கை -அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் திடீர் ஆலோசனை

வலுக்கும் ஒற்றைத் தலைமை கோரிக்கை -அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் திடீர் ஆலோசனை
Published on

ஒற்றைத்தலைமை குறித்து கடந்த 3 தினங்களாக பிரச்சினை வலுத்துள்ள நிலையில், செயற்குழு, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ஆலோசனையில் 10 பேர் ஈடுபட்டுள்ளனர். அதில், ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், செம்பலை, ஜெசிடி பிரபாகரன், வைகை செல்வன், ஆர்பி உதயகுமார், மனோஜ் பாண்டியன், தர்மர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் கடந்த 3 தினங்களாக வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகியோருடன் ஒற்றைத் தலைமை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுவந்த நிலையில் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றுள்ள நிலையிலும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகம் வரவுள்ளார் என்ற தகவல் வந்தவுடன் ஜெயகுமார், சி.வி. சண்முகம், பா. வளர்மதி ஆகியோர் ஆலோசனை கூட்டத்தின் பாதியிலேயே புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே ஜெயக்குமார் கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பொழுது ஓபிஎஸ் ஆதரவாளர்களால் முற்றுகையிடப்பட்டு, ஓபிஎஸ்க்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்கலாம்: ``ஆதீனத்தை தொட்டுப் பாருங்கள் பார்ப்போம்...”- மதுரை கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com