\
விரைவில் உலகத் தரத்தில் டிஜிட்டல் கேபிள் சேவை: தமிழக அரசு

விரைவில் உலகத் தரத்தில் டிஜிட்டல் கேபிள் சேவை: தமிழக அரசு

விரைவில் உலகத் தரத்தில் டிஜிட்டல் கேபிள் சேவை: தமிழக அரசு
Published on

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் டிஜிட்டல் உரிமம் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக மக்கள் விரைவில் குறைந்த செலவில் உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் கேபிள் டிவி சேவையைப் பெற முடியும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக மத்திய அரசின் உரிமம் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் நிறைவான கேபிள் டிவி சேவையை அரசின் கேபிள் நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கி வருவதாகவும், மாநில அரசின் கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வெகுவிரைவில் தமிழக மக்கள் குறைந்த செலவில் உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் கேபிள் டிவி சேவையைப் பெற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் வழங்குமாறு மறைந்த முதல்வர் ஜெயலலிதா பலமுறை மத்திய அரசை வலியுறுத்தியதாகவும், கடந்த பிப்ரவரியில் பிரதமரையும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடுவையும் தமிழக முதலமைச்சர் நேரில் சந்தித்து வலியுறுத்தியதாகவும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com