மு.க.அழகிரி சொன்னதுபோல் ஸ்டாலின் முதல்வராக வர முடியாது- பொள்ளாச்சி ஜெயராமன்

மு.க.அழகிரி சொன்னதுபோல் ஸ்டாலின் முதல்வராக வர முடியாது- பொள்ளாச்சி ஜெயராமன்

மு.க.அழகிரி சொன்னதுபோல் ஸ்டாலின் முதல்வராக வர முடியாது- பொள்ளாச்சி ஜெயராமன்
Published on

மு.க.அழகிரி கூறியதைப்போல ஸ்டாலின் எப்போதும் முதல்வராக முடியாது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

தைப்பொங்கல் பண்டிகையையொட்டி நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு 2500 ரூபாய் மற்றும் கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு பொருட்கள் மற்றும் இலவச வேஷ்டி சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 103 நியாயவிலை கடைகளில் 55,258 குடும்ப அட்டை பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.


இன்று பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 1 மற்றும் 2-வது வார்டு வடுகபாளையம் பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசும்போது,

"முதலில் மு.க.ஸ்டாலின் மீது உள்ள ஊழல் புகார்களுக்கு அவர் பதில் சொல்லவேண்டும். அமைச்சர்கள் மீது ஆதாரமில்லாமல் நடைபெறாத ஒப்பந்தங்களை நடைபெற்றதாக சொல்லி ரத்து செய்த டெண்டர்களை நடந்ததாகக்கூறி நாட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கிறார்.

ஸ்டாலினின் முதல்வர் கனவு ஒருபோதும் பலிக்காது. அவர் அண்ணன் மு.க.அழகிரி கூறியதைப்போல மு. க.ஸ்டாலின் ஒருபோதும் தமிழகத்தின் முதல்வராக முடியாது" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com