வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து ரூ. 2 லட்சம் மோசடி

வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து ரூ. 2 லட்சம் மோசடி

வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து ரூ. 2 லட்சம் மோசடி
Published on

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரிடம் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் செம்மண்கூடால் கிராமத்தை சேர்ந்தவர் ராமு கவுண்டர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர், பல ஆண்டுகளாக தேங்காய் விபாயாரம் செய்து வருகிறார். நேற்று மதியம் ஓமலூரில் உள்ள தனது வங்கிக் கணக்கில் இருந்து 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு ஊருக்குச் சென்றுள்ளார். 2 லட்சம் ரூ‌பாய் பணத்தை உதவியாளரிடம் கொடுத்து விட்டு, மீதமுள்ள பணத்தை அவர் வைத்திருந்தார். அப்போது அவர்களை பின்தொடர்ந்த நபர் ஒருவர், தான் வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி, ராமு வருமானவரி செலுத்தாமல் ஏமாற்றி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். 

ராமு வைத்திருந்த 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நபர், உரிய ஆவணங்களுடன்‌ ஓமலூர் காவல் நிலையத் திற்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், சிறிது நேரத்தில் காவல் நிலையத்திற்குச் சென்று கேட்டபோது, யாரும் பணம் கொண்டு வரவில்லை எனக் கூறியுள்ளனர். வருமான வரித்துறை அதிகாரி போன்று நடித்து ஏமாற்றியவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com