\
படப்பிடிப்பில் 45 முக்கிய நடிகர்களுடன் அருண் விஜய்: ரசிகர்களை கவர தீவிரம் காட்டும் ஹரி

படப்பிடிப்பில் 45 முக்கிய நடிகர்களுடன் அருண் விஜய்: ரசிகர்களை கவர தீவிரம் காட்டும் ஹரி

படப்பிடிப்பில் 45 முக்கிய நடிகர்களுடன் அருண் விஜய்: ரசிகர்களை கவர தீவிரம் காட்டும் ஹரி
Published on

அருண் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை 45 முக்கிய நடிகர்களைக் கொண்டு நடத்தி வருகிறார் இயக்குனர் ஹரி.

விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், விஷால், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் இயக்குநராக பணியாற்றியுள்ள ஹரி இதுவரை தனது மனைவியின் அண்ணனும் நடிகருமான அருண் விஜய்யுடன் பணியாற்றியது இல்லை. இருவரும் எப்போது இணைவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்துவந்த நிலையில், கடந்த வருட இறுதியில் இருவரும் இணையும் ’அருண் விஜய் 33’ படத்தின் அறிவிப்பு வெளியானது.  கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கால் தடைப்பட்டுப் போனது. இந்த நிலையில், தற்போது அரசு படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்துள்ளதால் மீண்டும் கடந்த ஜூலை 28 ஆம் தேதிமுதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. 

இதற்கான படப்பிடிப்பு பழனி, ராமேஸ்வரம், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. அதில் படத்திற்கு தேவையான முக்கிய காட்சிகளை இயக்குனர் படமாக்கினார். குறிப்பாக அதிரடியான சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ராமேஸ்வரம் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு படக்குழுவினர் மீண்டும் பழநி சென்றுள்ளனர். அங்கு அருண்விஜய், சமுத்திரகனி, பிரியா பவானி சங்கர், ராதிகா, போஸ் வெங்கட், இமான் அண்ணாச்சி, புகழ் உள்ளிட்ட 45 க்கும் மேற்பட்ட முக்கிய நடிகர்களை கொண்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார் ஹரி. அதிக நட்சத்திரங்கள் இடம்பெறும் காட்சிகள் என்பதால் அனைத்தையும் விரைவாக முடிக்க திட்டமிட்டு ஹரி தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு சுமார் ஒரு வாரம் நடைபெறும் என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். தற்போது படமாக்கப்படும் காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் என்று கூறுகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com