ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்று தாக்கல்? - அவிழுமா மர்ம முடிச்சு?

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்று தாக்கல்? - அவிழுமா மர்ம முடிச்சு?
ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்று தாக்கல்? - அவிழுமா மர்ம முடிச்சு?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஆறுமுகசாமி ஆணையம் இன்று (செவ்வாய்க்கிழமை)  தனது அறிக்கையை தமிழக அரசிடம் சமர்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 5ஆண்டுகள் விசாரணை மேற்கொண்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கிறது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்திற்கு செவ்வாய்க்கிழமை முற்றுப்புள்ளி வைக்கிறது ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக எழுந்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை 2017ம் ஆண்டு துவங்கியது. அதனை தொடர்ந்து 4ஆண்டுகளாக அப்பல்லோ மருத்துவமனை, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குழு, ஓபிஎஸ், சசிகலா போன்று பல தரப்பில் விசாரணையை மேற்கொண்டது. விசாரணையை மேற்கொள்ள காலஅவகாத்தை 13வது முறை மேற்கொண்ட ஆணையம், அறிக்கை தாக்கல் செய்ய கடந்த ஆகஸ்ட் 3ம் தேதியுடன் முடிந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவ குழு அறிக்கை அளிக்காத காரணத்தால் 14வது முறையாக மூன்று வாரங்கள் கால அவகாசம் தர தமிழக அரசுக்கு ஆணையம் கடிதம் எழுதியது.

இதனால் மீண்டும் மூன்று வார கால அவகாசம் கொடுத்து ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்குள்  அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு அறிவுறுத்தியது. இந்த சூழலில் எய்ம்ஸ் மருத்துவ குழு தனது அறிக்கை கடந்த வாரம்  ஆணையத்திடம் சமர்பித்தது. அதில் ஜெயலலிதா விற்கு வழங்கிய சிகிச்சையில் எவ்வித சந்தேகமும் இல்லை என 7 பேர் கொண்ட எய்ம்ஸ் குழு அறிக்கை சமர்பித்தது. இதனை தொடர்ந்து ஆறுமுகசாமி ஆணையம் இறுதி அறிக்கையை தயார் செய்துள்ளது. சுமார் 500 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை ஆங்கிலம் மற்றும் தமிழிலில் அறிக்கை தயாரிக்கியுள்ளது.

அந்த அறிக்கையை 24ம் தேதிக்குள் தாக்கல் வேண்டிய நிலையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் செவ்வாய்க்கிழமை இரவு சுற்றுப்பணயம் மேற்கொள்வதால், நாளை காலை தலைமை செயலகத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com