ஆறுமுகசாமி ஆணைய விசாரணை இன்று மீண்டும் தொடக்கம்
கடந்த 30ஆம் தேதி நிறுத்தி வைக்கப்பட்ட ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணை இன்று மீண்டும் தொடங்குகிறது.
சசிகலாவுக்கு எதிராக சாட்சி அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு ஒப்புதல் வழங்கிய ஆணையம் விசாரணையை பிப்ரவரி 11ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. மேலும் சசிகலா தரப்பு யாரை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்ற விவரத்தைக் கொடுக்கவும், எதிராக சாட்சி சொன்னதற்கான காரணத்தைத் தெரிவிக்கவும் ஆணையம் உத்தரவிட்டது.
கடந்த வாரம் சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், அனைத்து நபர்களையும் விசாரித்த பின்னர், குறுக்கு விசாரணை செய்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தனர். எனவே பிரமாண பத்திரம் மீது ஆணையம் இன்று உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பனிடம் இன்று ஆறுமுகசாமி ஆணையம் விசாரனை மேற்கொள்ள உள்ளது.