\
தமிழகத்தில் ஆட்சி கவிழ விடமாட்டோம்: ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ. ஆறுகுட்டி உறுதி

தமிழகத்தில் ஆட்சி கவிழ விடமாட்டோம்: ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ. ஆறுகுட்டி உறுதி

தமிழகத்தில் ஆட்சி கவிழ விடமாட்டோம்: ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ. ஆறுகுட்டி உறுதி
Published on: 

தமிழகத்தில் ஆட்சி கவிழ விடமாட்டோம் என ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ ஆறுகுட்டி தெரிவித்துள்ளார். தாங்கள் வைத்த இரண்டு கோரிக்‌கைகளும் நிறைவேறினால் இரு அணிகளும் இணையும் எனவும் அவர் கூறினார்.

அதிமுக ஆட்சி குறித்து ஆறுகுட்டி கருத்து தமிழகத்தில் ஆட்சி கவிழ வாய்ப்பில்லை எனவும் அவ்வாறு வரும் பட்சத்தில் ஆதரவளிப்போம் என கூறியுள்ள ஓபிஎஸ் கருத்தே தனது கருத்து என கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி கூறியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த எம்.எல்.ஏ. ஆறுகுட்டி, ஓபிஎஸ் வைத்த இரண்டு கோரிக்கைகளும் நிறைவேறும் பட்சத்தில் அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. நிச்சயமாக இந்த ஆட்சி தொடரும். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரின் கனவு பலிக்காது. சட்டமன்ற கூட்டம் வெற்றிகரமாக முடியும். தினகரனை சந்தித்து வரும் சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை நிமித்தமாக மட்டுமே சந்தித்து வருகின்றனர். குடியரசுத்தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து தலைமை முடிவு செய்யும். தற்போது உள்ள அதிமுகவின் பொது செயலாளர் மற்றும் துணை பொது செயலாளரை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அவர் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com