\
காற்றுடன் விடாது பெய்யும் கனமழை: சென்னைக்கு விமானங்களின் வருகை நிறுத்தம்

காற்றுடன் விடாது பெய்யும் கனமழை: சென்னைக்கு விமானங்களின் வருகை நிறுத்தம்

காற்றுடன் விடாது பெய்யும் கனமழை: சென்னைக்கு விமானங்களின் வருகை நிறுத்தம்
Published on: 

மழையால் சென்னை விமான நிலையத்துக்கு இன்று மாலை(11.11.2021) 6 மணிவரை விமானங்களின் வருகை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் மாலை 6 மணிவரை எந்த விமானங்களும் தரை இறங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னையிலிருந்து பிற நகரங்களுக்கு புறப்படும் விமானங்களில் மாற்றம் எதுவும் இருக்காது எனவும், அவை தொடர்ந்து இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. சென்னையில் பலத்த காற்றுடன் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் பயணிகளின் பாதுகாப்பு கருதி விமான நிலைய நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com