கோவை: வீடுகளுக்கே வந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க ஏற்பாடு
கோவை மாநகராட்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்குட்பட்ட இணை நோய் இல்லாதவர்களில் ஆக்சிஜன் அளவு 94க்கு மேல் இருந்தால் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சைகள் வழங்க HOME TRIAGE என்ற மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு மண்டலத்திற்கு இரண்டு Home Triage மருத்துவ குழுக்கள் வீதம் ஐந்து மண்டலத்திற்கு 10 Home Triage மருத்துவ குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்குழுவில் ஒரு மருத்துவர் மற்றும் இரண்டு செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இக்குழுவினர் வீடுகளுக்கே வந்து சிகிச்சைக்கான ஆலோசனைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, கொரோனா நோய்த்தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கண்ட Home Triage மருத்துவ குழுக்கள் அறிவுரையின்படி தேவையான மருந்துகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமைப்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் உதவிகள் தேவைப்படின் மருத்துவ ஆலோசனை உட்பட 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண் 0422- 2302323-க்கு தொடர்பு கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.