பரோல் கிடைக்க குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி: அற்புதம்மாள்

பரோல் கிடைக்க குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி: அற்புதம்மாள்

பரோல் கிடைக்க குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி: அற்புதம்மாள்
Published on

பேரறிவாளனுக்கு பரோல் விடுப்பு கிடைக்க குரல் கொடுத்த அனைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.

இதுகுறித்து புதிய தலைமுறையிடம் தொலைபேசி வழியாக பேசிய அற்புதம்மாள், “27 ஆண்டுகளாக காத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு மாத பரோலுக்கு விண்ணப்பித்திருந்தோம். என் கணவருக்கு உடல்நிலை சரியில்லை. பேரறிவாளனுக்கும் உடல்நிலை சரியில்லாததால் இருவருக்கும் வீட்டில் வைத்து மருத்துவம் பார்க்கலாம் என்றுதான் விண்ணப்பித்தேன். ஒரு மாத காலம் பரோல் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதற்காக குரல் கொடுத்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மேலும், “இந்த வழக்கின் சட்ட நுணுக்கங்கள் எனக்கு தெரியவில்லை என்றாலும், வழக்கின் அடிப்படையிலேயே தவறுள்ளதாக தற்போது நீதிபதிகள் கூறியுள்ளனர். விரைவில் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றுதான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது நியாயமான கோரிக்கைதான் என்று அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். ஏற்கனவே என் மகனின் வாழ்க்கை போய்விட்டது. பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை ஆக வேண்டும் என்பதுதான் எனது ஒரே கோரிக்கை” என்று அற்புதம்மாள் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com