\
பாலில் ரசாயனமா?: அமைச்சரின் புகாருக்கு ஆரோக்கியா மறுப்பு

பாலில் ரசாயனமா?: அமைச்சரின் புகாருக்கு ஆரோக்கியா மறுப்பு

பாலில் ரசாயனமா?: அமைச்சரின் புகாருக்கு ஆரோக்கியா மறுப்பு
Published on

தனியார் நிறுவனங்களின் பாலில் ரசாயனம் கலப்பதாக பால்வளத்துறை அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஆரோக்யா பால் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் குற்றச்சாட்டு குறித்து ஆரோக்யா பால் நிர்வனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரமோகன் செய்தியாளர்களை சந்தித்து மறுப்பு தெரிவித்தார். 47 ஆண்டுகளாக பால் வர்த்தகத்தில் உள்ள நிலையில், விவசாயிகளிடம் இருந்து இடைத்தரகர்களின்றி நேரடியாக பால் கொள்முதல் செய்யப்படுவதாக அவர் கூறினார். பாலில் ரசாயனம் ஏதும் கலப்பதில்லை என்று கூறிய அவர், பால் கொள்முதல் முதல் விற்பனை வரையான நடைமுறைகளை செய்தியாளர்கள் விரும்பினால் நேரில் பார்க்க வரலாம் என்றும் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com