திருமணமாகி 25 நாட்கள்... மாரடைப்பால் இளம் ராணுவ வீரர் மரணம்

திருமணமாகி 25 நாட்கள்... மாரடைப்பால் இளம் ராணுவ வீரர் மரணம்

திருமணமாகி 25 நாட்கள்... மாரடைப்பால் இளம் ராணுவ வீரர் மரணம்
Published on

கருங்கல் அருகே திருமணமாகி 25 நாட்களே ஆன நிலையில் ராணுவ வீரர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம் பிச்சவிளை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (32). இந்திய எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வந்த இவர், தனது திருமணத்திற்காக ஒருமாத விடுப்பில் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி சொந்த ஊர் வந்துள்ளார்.

இந்த நிலையில் இவருக்கு கடந்த 21-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து விடுமுறை முடிந்து இன்று பணிக்கு திரும்ப இருந்த சரவணனுக்கு நேற்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதில் சுயநினைவை இழந்த அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமாகி 25 நாட்களே ஆன நிலையில் மணமகன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com