6 ஆண்டுகளாக வைத்திருந்த துப்பாக்கி.. கொலையாளிகளுக்கு பறந்த துப்பு- ஸ்கெட்ச் போட்டு ஆம்ஸ்ட்ராங் கொலை?

வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஆல் இந்தியா லைசன்ஸ் உடன் கூடிய விலை உயர்ந்த துப்பாக்கி ஒன்றை தன்னுடனே வைத்திருந்தார். அந்த துப்பாக்கி அவர் வசம் இல்லாததை அறிந்து கொலை நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங் pt web

வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஆல் இந்தியா லைசன்ஸ் உடன் கூடிய விலை உயர்ந்த துப்பாக்கி ஒன்றை தன்னுடனே வைத்திருந்தார். அந்த துப்பாக்கி அவர் வசம் இல்லாததை அறிந்து கொலை நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங் புதிய தலைமுறை

ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக ஆல் இந்தியா லைசன்ஸ் பெற்று இந்தியா முழுவதும் எங்கு சென்றாலும் துப்பாக்கியை தன்னுடனே கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார் ஆம்ஸ்ட்ராங். இத்தாலியில் தயாரிக்கப்படும் Beretta Tom cat type 3032 வகை துப்பாக்கியை வாங்கியுள்ளார்.

இந்த வகை துப்பாக்கி மார்க்கெட்டில் 9 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது என காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். 9 ரவுண்டுகள் வரை ஒரே நேரத்தில் சுடும் இந்த துப்பாக்கியை ஆம்ஸ்ட்ராங் இத்தாலியில் இருந்து வாங்கியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங்
நெல்லை காங். நிர்வாகி To ஆம்ஸ்ட்ராங் | தொடரும் கொலைகள்.. கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்!

தனது உயிருக்கு ரவுடிகள் மூலம் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக உரிமம் பெற்றுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக துப்பாக்கியை சென்னை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆம்ஸ்ட்ராங் பின் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி மீண்டும் தனது துப்பாக்கியை காவல்துறையிடம் இருந்து பெற்றுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம் புதிய தலைமுறை

ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டுக்கு செல்லும்போது, அருகில் உள்ள பிரியாணி கடையில் நின்று கொண்டு கொலையாளிகள் இவர் எப்போதெல்லாம் துப்பாக்கி வைத்திருப்பார்? என்பது குறித்து உளவு பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில் வீட்டுக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தபோது துப்பாக்கி இல்லாத நேரத்தில் உளவு நபர் கொடுத்த தகவலின்பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிய ஓடியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

ஆம்ஸ்ட்ராங்
‘விரைவில் பிரளயம் வரும்’ - கான்ஸ்டபிள் To 121 பேர் பலியான கூட்டம்.. போலே பாபா பற்றிய பகீர் பின்னனி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com