திருமணமாகி 6 மாதத்தில் விபரீத முடிவு எடுத்த காவலர் - ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழ்ந்த சோகம்

திருமணமாகி 6 மாதத்தில் விபரீத முடிவு எடுத்த காவலர் - ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழ்ந்த சோகம்
திருமணமாகி 6 மாதத்தில் விபரீத முடிவு எடுத்த காவலர் - ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழ்ந்த சோகம்

அம்பத்தூர் அருகே ஆயுதப்படை காவலர் சரவணன்குமார் பாதுகாப்பு பணியில் இருக்கும் பொழுதே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டில் அதிகமாக பணத்தை இழந்ததால் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

சிவகங்கை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த சரவணன்குமார் (30) , ஆவடி பூம்பொழில் நகரில் உள்ள நேரு தெருவில் தங்கி காவல் துறையில் வேலைப் பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்னதாகத்தான், ஸ்வேதா (26) என்பவருடன், திருமணம் ஆனதாக கூறப்படுகிறது.

மத்திய தொலைத்தொடர்பு பாதுகாப்பு அலுவலகத்தில் ஆயுதப்படை காவலரான சரவணகுமார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது பணியில் இருக்கும் பொழுது, தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.

சம்பவ இடத்திற்கு அம்பத்தூர் காவல் துணை ஆணையர் மகேஷ், உதவி ஆணையர் கனகராஜ், ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டில் அதிகமாக பணத்தை இழந்ததால் மன உளைச்சலில் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com