ஜெயலலிதா நினைவிடத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை!

ஜெயலலிதா நினைவிடத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை!

ஜெயலலிதா நினைவிடத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை!
Published on

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரீனாவில் உள்ளது. இங்கு போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். இன்று காலை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய போலீஸ்காரர் அருண்ராஜ் பாதுகாப்பு பணியில் இருந்தார். திடீரென தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதைக் கண்டவர்கள், அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் உயிரிழந்தார்.

அருண்ராஜ், மதுரையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. எதற்காக அவர் தற்கொலை செய்துகொண்டார் என உடனடியாகத் தெரியவில்லை. சம்பவ இடத்தை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் பார்வையிட்டார். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com