அர்ஜூன் சம்பத் - நடிகர் விஜய் சேதுபதிபுதிய தலைமுறை
தமிழ்நாடு
‘விஜய் சேதுபதியை தாக்கினால் ரூ.1001 பரிசு’ என பதிவிட்ட அர்ஜுன் சம்பத்துக்கு ரூ 4,000 அபராதம்!
நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு 1001 ரூபாய் பரிசு என்று சமூக வலைதளத்தில் பதிவிட்ட அர்ஜுன் சம்பத், நீதிபதி முன் குற்றத்தினை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
செய்தியாளர்: ஐஸ்வர்யா
நடிகர் விஜய் சேதுபதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பற்றி தவறாக பேசியதாக, இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், தனது ட்விட்டர் பக்கத்தில், "தேவர் ஐயாவை இழிவு படுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப் பரிசு ரூபாய் 1001 வழங்கப்படும்" என்று பதிவிட்டு இருந்தார். இதையடுத்து அர்ஜுன் சம்பத்தின் பதிவு தொடர்பாக கடந்த 17.11.2021 அன்று ஆய்வாளர் சாந்தி கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
Vijay SethupathiPT Desk
புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் 504, 506 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 5 வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், நேற்று ஆஜரான அர்ஜுன் சம்பத், தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருக்கு தண்டனை தொகையாக ரூ.4,000 அபராதம் விதித்து நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டார்.