விழிப்புணர்வு சைக்கிள் பயணம்: லடாக் சென்று திரும்பிய இளைஞர்களுக்கு பாராட்டு

விழிப்புணர்வு சைக்கிள் பயணம்: லடாக் சென்று திரும்பிய இளைஞர்களுக்கு பாராட்டு
விழிப்புணர்வு சைக்கிள் பயணம்: லடாக் சென்று திரும்பிய இளைஞர்களுக்கு பாராட்டு

ஜெயங்கொண்டத்தில் இருந்து லடாக் வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்ட இளைஞர்கள் மீண்டும் ஜெயங்கொண்டம் திரும்பினர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த வினோத், ராசு ஆகிய இரு இளைஞர்களும் கடந்த ஜூன் 1-ஆம் தேதி சைக்கிள் மூலம் ஜெயங்கொண்டத்தில் இருந்து புறப்பட்டு ஜூன் 31-ஆம் தேதி லடாக்கை சென்றடைந்தனர்.

ஒருநாள் அங்கு தங்கியிருந்த நிலையில் ஜூலை 2-ஆம் தேதி லடாக்கில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கிய அவர்கள் இன்று 20ஆம் தேதி ஜெயங்கொண்டத்தை வந்தடைந்தனர். ஜெயங்கொண்டம் வந்த இவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு அனைவரும் வாழ்த்தி பாராட்டினர்.

இதுகுறித்து இளைஞர்கள் கூறும்போது... தேசத்தின் ஒற்றுமைக்காகவும் ராணுவத்தினர் பொதுமக்களுக்காக லடாக்கில் படும் துயரங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இளைஞர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டதாக கூறினர்.

ஜெயங்கொண்டத்தில் இருந்து லடாக் சென்று திரும்பிய தூரம் 8,400 கிலோ மீட்டர். இது மிகவும் கடினமாக இருந்தாலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மேற்கொண்ட பயணம் என்பதால் மிகவும் பெருமைப்படுவதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com