அரியலூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியில் இருந்த பெண் கிராம உதவியாளர் உயிரிழப்பு

அரியலூரில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியில் இருந்த பெண் கிராம உதவியாளர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிராம உதவியாளர் ராஜேஸ்வரி
கிராம உதவியாளர் ராஜேஸ்வரி pt desk

செய்தியாளர்: வெ.செந்தில்குமார்

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த மையத்தில் காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

அவர்களில் வெண்வான் கொண்டான் கிழக்கு வருவாய் கிராமத்தில் கிராம உதவியாளராக இருக்கும் ராஜேஸ்வரி என்பவரும் பணியாற்றினார்.

கிராம உதவியாளர் ராஜேஸ்வரி
கிராம உதவியாளர் ராஜேஸ்வரி pt desk

நேற்றிரவு அவர் பணியில் இருந்தபோது, அவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜேஸ்வரியுடன் பணியாற்றிய அலுவலர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தபோதும், சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி உயிரிழந்தார்.

கிராம உதவியாளர் ராஜேஸ்வரி
தருமபுரி: குடும்பத் தகராறில் சமையல் மாஸ்டர் எடுத்த விபரீத முடிவு – போலீசார் விசாரணை

இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கப் பதிவு செய்து ராஜேஸ்வரி உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com