தமிழ்நாடு
அரியலூர் திரும்பிய கோயம்பேடு மார்க்கெட் ஊழியருக்கு கொரோனா : அச்சத்தில் கிராமம்.!
அரியலூர் திரும்பிய கோயம்பேடு மார்க்கெட் ஊழியருக்கு கொரோனா : அச்சத்தில் கிராமம்.!
சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்து விட்டு ஊர் திரும்பிய அரியலூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த ஒருவர், சென்னை கோயம்பேடு சந்தையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி, சென்னையில் இருந்து அரியலூருக்கு அவர் சென்றுள்ளார். அங்கு சென்றதும் காய்ச்சல், சளி பாதிப்பு இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவரது கிராமத்தை தனிமைப்படுத்தியுள்ள சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்கெனவே ஏழு பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளான நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.