அரியலூர்: அரசு பேருந்தை ஓட்டிச்சென்ற அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்: உற்சாகமான மக்கள்

அரியலூர்: அரசு பேருந்தை ஓட்டிச்சென்ற அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்: உற்சாகமான மக்கள்
அரியலூர்: அரசு பேருந்தை ஓட்டிச்சென்ற அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்: உற்சாகமான மக்கள்

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய பேருந்து வசதியை துவக்கி வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அரசு பேருந்தை ஓட்டினார். 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள ஆனந்தாவாடி கிராமத்தில் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக கூடுதல் பேருந்து வசதியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்எஸ்.சிவசங்கர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஜெயங்கொண்டத்திலிருந்து உடையார்பாளையம் வழியாக ஆனந்தாவாடி கிராமத்திற்கு தினமும் இருமுறை வந்து செல்லும் இந்த பேருந்தை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் அமைச்சர் ஓட்டிச்சென்றார்.

இந்த பேருந்தில் அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா, பொது மக்கள் என பலரும் பயணம் செய்தனர். அப்போது செல்போனில் படம் பிடித்த சிலர் அமைச்சரை கூப்பிட்டு செல்போனை பார்க்கச் சொன்னார்கள். அதற்கு தொழிற்சங்கத்தினர், திரும்பிப் பார்த்தால் எப்படி வண்டியை ஓட்டுவது என கூறியதால் சிரிப்பலை ஏற்பட்டது. அமைச்சர் பேருந்து ஓட்டியதைக் கண்டு கிராம மக்கள் உற்சாகமடைந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com