அரியலூர்: இருவேறு சமூக காதலை சேர்த்து வைக்குமாறு காதலி காவல் நிலையத்தில் தஞ்சம்

அரியலூர்: இருவேறு சமூக காதலை சேர்த்து வைக்குமாறு காதலி காவல் நிலையத்தில் தஞ்சம்

அரியலூர்: இருவேறு சமூக காதலை சேர்த்து வைக்குமாறு காதலி காவல் நிலையத்தில் தஞ்சம்
Published on

அரியலூரில் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்களின் காதலை சேர்த்து வைக்கக்கோரி இளம் பெண் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பெண்ணின் அக்கா மகளிர் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார்.

அரியலூர் மாவட்டம் சிறுகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுரோஜா வயது (21). இவர், சென்னையில் வேலை பார்க்கும்போது இவருக்கும் சென்னையைச் சேர்ந்த வல்லரசு என்பவருக்கும் பழக்கமாகி நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. இந்நிலையில் சிறுகளத்தூரில் இருந்த அழகுரோஜா நேற்று இரவு அரியலூருக்கு பேருந்தில் வந்துள்ளார். அப்போது பேருந்து நடத்துநர், அழகு ரோஜா வீட்டைவிட்டு கோபித்து வந்ததை அறிந்து மகளிர் காவல் நிலையத்தில் விட்டுச் சென்றுள்ளார்.

இதனையடுத்து பெண்ணின் காதலன் வல்லரசு, அழகு ரோஜாவை மகளிர் காவல் நிலையத்தில் சந்திக்க வந்துள்ளார். அப்போது அவரை மகளிர் போலீசார் விசாரித்ததில் இருவரும் காதலிப்பதாகவும் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டுமென்றும் கூறியுள்ளனர். இதனைக்கேட்ட போலீசார் காலையில் பேசிக்கொள்ளலாம் எனக் கூறி வல்லரசை திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து இன்று காலை அழகு ரோஜாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது பெண்ணின் அக்கா அன்பு ரோஜா மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அவரை தடுத்த போலீசார், தண்ணீர் ஊற்றி அழைத்து சென்றனர். இதனையடுத்து பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தின் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஷ்கான் அப்துல்லா உறவினர்களிடம் விபரத்தை கேட்டறிந்து பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறோம். நீங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறியதையடுத்து உறவினர்கள் கலைந்து காவல் நிலையத்தின் ஓரமாக நின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com