அரியலூர்: திருமணம் செய்வதாக ஏமாற்றிய நபர்.. 4 மாத குழந்தையைக் கொலை செய்துவிட்டு தாய் விபரீத முடிவு!

அரியலூரில் 4 மாத குழந்தையை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ends life
ends lifeகோப்புப் படம்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருடைய கணவர், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனையடுத்து தந்தை ஊரிலேயே வாழ்ந்து வந்த ராஜேஸ்வரி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்குச் சென்று வேலை பார்த்துள்ளார். அப்போது இவரது நிலைமையை அறிந்து வாலிபர் ஒருவர், அவரை காதலித்துள்ளார். இவருடைய காதல் நெருக்கமானதில் ராஜேஸ்வரி கர்ப்பமாகியுள்ளார். இந்த விஷயத்தை, காதலனிடம் ராஜேஸ்வரி கூறிய நிலையில் ’கருவை கலைக்க வேண்டாம்; நான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

ends life
ends lifeகோப்புப் படம்

இதனை நம்பி, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தந்தை ஊரான கொடுக்கூருக்கு நிறைமாத கர்ப்பிணியாக வந்துள்ளார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. இதையும் தன் காதலரிடம் தெரிவித்துள்ளார், ராஜேஸ்வரி. அவரும், ‘குழந்தையுடன் உன்னை என் அம்மாவிடம்‌ அழைத்துச் சென்று திருமணம் செய்துகொள்கிறேன்’ எனக் கூறிவந்த நிலையில், நேற்று முன்தினம் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி, தன்னுடைய‌ 4 மாத கைக் குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து குவாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com