’’என் பெயரில் போலி வாட்ஸ் அப்... யாரும் நம்பி ஏமாற வேண்டாம்’’ - அரியலூர் ஆட்சியர்

’’என் பெயரில் போலி வாட்ஸ் அப்... யாரும் நம்பி ஏமாற வேண்டாம்’’ - அரியலூர் ஆட்சியர்
’’என் பெயரில் போலி வாட்ஸ் அப்... யாரும் நம்பி ஏமாற வேண்டாம்’’ - அரியலூர் ஆட்சியர்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி வாட்ஸ் -அப்பை யாரோ பயன்படுத்துவதாகவும் அதனை நம்பி ஏமாற வேண்டாம் என ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி பெயர் மற்றும் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் வைத்து 7061656848 என்ற எண்ணில் இருந்து மாவட்ட அலுவலர்களுக்கு வாட்ஸ்-அப் மெசேஜ் ஒன்று வந்திருக்கிறது. அதில் ’’என்னுடைய புதிய நம்பர் இது, இதில் உள்ள கிஃப்ட் கூப்பன் 10 ஆயிரம், உடனடியாக 10 கார்டு வாங்குங்கள்’’ என மாவட்ட ஆட்சியர் கூறுவது போல் குறுந்தகவல் வந்துள்ளது.

இதுகுறித்து ஆட்சியர்‌ ரமண சரஸ்வதி கூறுகையில், என்னுடைய பெயரில் வாட்ஸ்-அப் மெசேஜ் வருவதாக புகார் எழுந்திருக்கிறது. அதனை நம்பி யாரும் ஏமாற‌வேண்டாம் என அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com