அரியலூர்: திடீரென தீ பிடித்து எரிந்த பார்சல் லாரி; ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

அரியலூர்: திடீரென தீ பிடித்து எரிந்த பார்சல் லாரி; ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

அரியலூர்: திடீரென தீ பிடித்து எரிந்த பார்சல் லாரி; ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
Published on

அரியலூரில் சாலையோரம் நிறுத்தி தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென பார்சல் லாரி தீப்பற்றி எரிந்தது. ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

திருச்சியிலிருந்து நேற்று இரவு ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, ஆண்டிமடம், போன்ற பகுதிகளுக்கு மளிகை, ஜவுளி, மருந்து பொருட்கள், ஆட்டோ ஸ்பேர்ஸ் மற்றும் பட்டாசு போன்ற வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரியை திருச்சி கீரைக்கார தெருவைச் சேர்ந்த சபரி என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் ஜெயங்கொண்டம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கான பொருட்களை இறக்கிவிட்டு இரவானதால் அண்ணா சிலை அருகே ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் மற்றும் லோடு மேன்கள் அனைவரும் லாரியிலேயே படுத்து தூங்கி விட்டனர்.

இதையடுத்து இன்று அதிகாலை திடீரென்று லாரி வெடிசத்தத்துடன் தீ பிடித்து எரிய துவங்கியுள்ளது. அப்போது லாரியில் இருந்து அலறல் சத்தம் கேட்கவே அருகில் உள்ள வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்து உடனே தீயணைப்புத் துறையினருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் தீயில் மாட்டியிருந்த 5 பேரையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com